இமாச்சல பிரதேசம்: பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

இமாச்சல பிரதேசத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-04 06:40 GMT

கோப்புப்படம் 

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தின் நியோலி-ஷன்ஷேர் சாலையில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குள்ள சைன்ஜ் பள்ளத்தாக்கின் ஜங்லா பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டுமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து குலு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறும்போது, இமாச்சல பிரதேச மாநிலம் குலுவில் நடந்த பேருந்து விபத்து நெஞ்சை உருக்குகிறது. இந்த துயரமான நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது:

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் கருணைத் தொகையாக ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50, ஆயிரமும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்