இமாச்சல பிரதேசம் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிப்பு.!
இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.
சிம்லா,
இமயமலை பிரதேசங்களான இமாசலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளன. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளன
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இமாசலபிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டி வருகிறது. இதுவரை 170 மேகவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிந்துள்ளது. அத்துடன், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
வரலாறு காணாத மழை, வெள்ளம், மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு போன்றவற்றால் மாநிலம் முழுவதும் பேரழிவை சந்தித்து வரும் நிலையில், இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.