இமாச்சல அமைச்சரவை விரிவாக்கம்: மறைந்த வீரபத்ரசிங்கின் மகன் விக்ரமாதித்ய மந்திரியாக பதவி ஏற்பு

இம்மாச்சல பிரதேசம் சிம்லாவில் ஆளுநர் மாளிகையில் புதிய மந்திரிகள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Update: 2023-01-08 06:29 GMT

சிம்லா,

அண்மையில் நடந்து முடிந்த இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதையடுத்து அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 11ம் தேதியன்று இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகுவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியையும் பதவியேற்றனர். சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக பதவியேற்றது முதல் அமைச்சராக விரிவாக்கம் தொடர்பாக பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதேசமயம் பல்வேறு காரணங்களால் அமைச்சரவை விரிவாக்கம் பல்வேறு காரணங்களால் தள்ளி போனது.

இந்தநிலையில், இமாச்சலப்பிரதேசத்தில் சிம்லாவில் ஆளுநர் மாளிகையில் புதிய மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். புதிய மந்திரிகளுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மறைந்த முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ரசிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் கேபினட் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்