இமாச்சல பிரதேசம்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 16 பேர் பலி
இமாச்சல பிரதேச மாநிலம் குலு பகுதியில் தனியார் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
சிம்லா,
இமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தின் நியோலி-ஷன்ஷேர் சாலையில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குள்ள சைன்ஜ் பள்ளத்தாக்கின் ஜங்லா பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டுமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து குலு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.