டெல்லி விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: பயணி கைது
டெல்லி விமான நிலையத்தில் வெளிநாட்டவரிடமிருந்து ரூ.70 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பெலிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து சுமார் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவரின் உடைமைகள் அதிகாரிகள் முழுமையாகச் சோதனை செய்ததில், அவரிடம் இருந்து ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் மொத்தம் 9.95 கிலோ எடை கொண்டதாக இருந்துள்ளது. இது சர்வதேச சந்தையில் ரூ.69.95 கோடி மதிப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணி கைது செய்யப்பட்டு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.