தட்சிண கன்னடாவில் பலத்த மழை

தட்சிண கன்னடாவில் பலத்த மழையால் தென்னை மரம் சாய்ந்து விழுந்து வீடு சேதம் அடைந்தது.

Update: 2023-04-10 06:00 GMT

மங்களூரு-

தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா பகுதியில் நேற்று திடீரென மழை பெய்தது. ஒரு சில இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. பதங்கடி கிராமம் படியாறு கிராமத்தில் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஜோபெல்லா பெலிக்ஸ் என்பவரின் வீட்டின் மீது அருகில் இருந்த தென்னை மரம் சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்த பஞ்சாயத்து ஊழியர்கள் விரைந்து வந்து பெலிக்ஸ் வீட்டை பார்வையிட்டனர்.

மழையால் சேதமடைந்த வீட்டிற்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாயத்து ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், தட்சிண கன்னடாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்