திரிபுராவில் கனமழை, வெள்ளம் - பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2024-08-23 01:27 GMT

அகர்தலா,

திரிபுரா மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதுடன், நிலச்சரிவுக்கும் வழிவகுத்தது. கடந்த 30 ஆண்டுகள் இல்லாத அளவில் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஏற்கெனவே 10 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கனமழை, நிலச்சரிவால் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு மாவட்டங்களிலும் உள்ள 450 நிவாரண முகாம்களில் சுமார் 65,500 பேர் தஞ்சமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது மாநிலத்தின் 8 மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டாலும், இன்று இரவு முதல் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்