தமிழகத்தில் தென் மாவட்டங்களில் டிச.20, 21-ல் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரும் எனவும் கூறப்பட்டுள்ளது