டெல்லியில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூட கனமழை

டெல்லியில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூட கனமழை பெய்து வருகிறது.;

Update: 2022-05-30 12:31 GMT

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த ஒரு வாரமாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. டெல்லி வீதிகளில் வீசிய அனல்காற்று பொதுமக்களை வறுத்தெடுத்து மிகவும் கடுமையாக பாதிப்படைய செய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக இந்த நிலைமை அடியோடு மாறி விட்டது. இந்தநிலையில் டெல்லியில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால் டெல்லியில் வெப்ப நிலை தலைகீழாக மாறி உள்ளது. டெல்லியில் பல்வே இடங்களில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்