வரலாறு காணாத வகையில் இமாசல பிரதேசத்தில் 114 டிகிரி வெயில்

தலைநகர் சிம்லாவில் 87.8 டிகிரி வெப்பம் பதிவானது.;

Update: 2024-06-14 22:15 GMT

சிம்லா,

நாட்டின் குளிர் பிரதேசமான இமாசல பிரதேச மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இந்த நிலையில் இமாசல பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நேரி நகரில் நேற்று 113.9 டிகிரி வெப்பம் பதிவானது.இது வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை என மாநில வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் தலைநகர் சிம்லாவில் 87.8 டிகிரி வெப்பம் பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்