வடமேற்கு, மத்திய இந்தியாவில் அடுத்த 2-3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்; வானிலை ஆய்வு மையம்
புதுடெல்லி,
வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 2-3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. மே மாதம் டெல்லியில் மிகக்கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது. 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் வீசியதால் வெப்பம் தகித்தது. கடந்த சில நாட்களாக டெல்லியில் மழை பெய்ததால், வெப்பம் தணிந்து மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த நிலையில், அடுத்த 3 தினங்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தீபகற்ப பகுதியில் ஜூன் 7 முதல் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 தினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.