பேச்சு திறனற்ற, காது கேட்காத சிறுமி பாலியல் வன்கொடுமை - விடுதி காவலாளி கைது
குற்றவாளியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் திவாரி தெரிவித்தார்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் விடுதியில், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத 8 வயது சிறுமி தங்கியிருந்தார். நேற்று அந்த சிறுமியை, விடுதியின் காவலாளி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் பற்றி வந்த தகவலின்பேரில் விடுதிக்கு வந்த போலீசார் அச்சிறுமியை அழைத்து விசாரித்தனர். அப்போது, சிறுமி தனக்கு நடந்த கொடுமையை போலீசாரிடம் கூறினார். இதையடுத்து காவலாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் திவாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர் பெயர் ஓம் பிரகாஷ் திவாரி என்றும், கடந்த 5 ஆண்டுகளாக விடுதியின் காவலாளியாக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.