போலி ஆவணங்கள் மூலம் நிலம் ஆக்கிரமிப்பு: கோர்ட்டு வளாகத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

கோர்ட்டு வளாகத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-01 05:31 GMT

சண்டிகர்,

அரியானா மாநிலம் சோனிபெட் மாவட்டம் ஷாஷத்பூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் சுனில். இவருக்கு சொந்தமாக அந்த கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது.

இதனிடையே, சுனிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை அதேபகுதியை இந்தர்பால் என்ற நபர் போலியாக ஆவணங்களை தயாரித்து தனக்கு சொந்தமாக்கியுள்ளார். மேலும், அந்த போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை ஆக்கிரமித்து அந்த நிலத்தின் பெயரில் வங்கியில் கடனும் வாங்கியுள்ளார்.

போலி ஆவணங்கள் மூலம் தனது நிலத்தை பயன்படுத்தி வங்கியில் கடன் வாங்கிய இந்தர்பால் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்டம் நிர்வாகம், போலீசார் என பல்வேறு தரப்பு அதிகாரிகளிடமும் சுனில் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்தர்பால் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஷாஷத்பூரில் உள்ள கோர்ட்டிற்கு சுனில் நேற்று வந்துள்ளார். கோர்ட்டு வளாகத்திற்கு வந்த சுனில் தான் வைத்திருந்த விஷத்தை குடித்துள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுனிலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுனில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது தற்கொலைக்கு இந்தர்பால் உள்பட 9 பேர் காரணம் என தற்கொலை கடிதத்தையும் சுனில் தனது சட்டைப்பையில் வைத்துள்ளார். கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்