அரியானாவில் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் தீ விபத்து

அரியானாவில் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2023-05-09 21:02 GMT

சண்டிகர்,

அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவருக்கு சண்டிகரில் வீடு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் பூபிந்தர் சிங்கின் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. வீட்டின் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் ஏற்பட்ட தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயம் ஒரு டி.வி., ஏ.சி. மற்றும் மின் விசிறி ஆகிய பொருட்கள் தீயில் கருகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பூபிந்தர் சிங் ஹூடா டெல்லியில் இருந்ததாகவும், விபத்து குறித்து அறிந்ததும் அவர் சண்டிகர் விரைந்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்