பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹர்ஷா கொலையாளிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹர்ஷா கொலையாளிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Update: 2022-08-21 21:44 GMT

பெங்களூரு: சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்ஷா. பஜ்ரங்தள பிரமுகரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த கொலை சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஹர்ஷா கொலை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஹர்ஷா கொலையாளிகள் செல்போன் பயன்படுத்தியதாகவும், சொகுசு வாழ்க்கை அனுபவித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியிருந்தார். இந்த நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஷர்ஷா கொலையாளிகள் தார்வார், விஜயாப்புரா, பெலகாவி, கலபுரகி சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வாழ்க்கை அனுபவித்ததால் போலீஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்