தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
சாம்ராஜ்நகரில் வீட்டில் தனியாக இருந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாம்ராஜ்நகர்:-
சாம்ராஜ்நகர் டவுன் புதிய மார்க்கெட் தேவாங்காலனியை சேர்ந்தவர் ரங்கநாத் என்ற ரங்கா (38). கூலி தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென்று மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாம்ராஜ்நகர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து சாம்ராஜ்நகர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.