மரத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

மரத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-09-05 22:29 GMT

விஜயநகர்: கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கனஒசஹள்ளி அருகே பசபுரா கிராமத்தை சேர்ந்தவர் கங்கப்பா (வயது 50). விவசாயி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது விளைநிலத்திற்கு சென்று அங்கிருந்த மரம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கனஒசஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

பின்னர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விவசாயி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது முதலில் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்