ஒரு பைசா ஊழல் செய்ததாக நிரூபணமானால் கூட என்னை பகிரங்கமாக தூக்கிலிடுங்கள் பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்
நான் ஒரு பைசா ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் கூட என்னை பகிரங்கமாக தூக்கிலிடுங்கள்.;
சண்டிகார்,
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஆம் ஆத்மி கிளினிக் திறப்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
என் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை என எல்லாவற்றையும் ஏவி விடுகிறார்கள். எப்படியாவது, 'கெஜ்ரிவால் ஒரு திருடன், அவனும் ஊழலில் ஈடுபட்டுள்ளான்' என்று நிரூபிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். நான் பிரதமர் மோடிக்கு சொல்லிக் கொள்கிறேன். நான் ஒரு பைசா ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் கூட என்னை பகிரங்கமாக தூக்கிலிடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.