ஹல்லிகர் இன காளை மாடு ரூ.9¼ லட்சத்துக்கு விற்பனை

பல பரிசுகளை குவித்த ஹல்லிகர் இன காளை மாடு ரூ.9¼ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அதை கோவையை சேர்ந்தவர் வாங்கினார்.

Update: 2023-07-27 21:15 GMT

மண்டியா:

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா சீனிவாச அக்ரஹாரா கிராமத்தை சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மண்டியா மாவட்டம் இந்தவாலு கிராமத்தை சேர்ந்த அஜித் என்பவரிடம் ஹல்லிகர் இன காளை மாடு ஒன்றை ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வாங்கினார். அந்த காளைக்கு ஜாக்குவார் என பெயர் சூட்டி நவீன் வளர்த்து வந்ததுடன், மாட்டு வண்டி பந்தயங்களில் பயன்படுத்தி வந்தார்.

அந்த மாடு பல பரிசுகளை குவித்தது. கோவை, மைசூரு, மண்டியா, ராமநகர், துமகூருவில் நடந்த பந்தயங்களில் பரிசுகளை வென்ற அந்த காளைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில், அந்த காளை மாட்டை தமிழ்நாடு கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த சிரவை தம்பி என்பவர், நவீனிடம் இருந்து ரூ.9 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளார். அதாவது ரூ.1.20 லட்சத்துக்கு வாங்கிய மாட்டை நவீன் ரூ.9.20 லட்சத்துக்கு விற்றுள்ளார்.

அவருக்கு ரூ.8 லட்சம் லாபம் கிடைத்துள்ளது. இதனால் நவீன் மகிழ்ச்சியில் உள்ளார். இதையொட்டி நவீன், ஜாக்குவார் காளை மாட்டை தனது கிராமத்தில் உள்ள வீதியில் ஊர்வலமாக அழைத்து வந்து, சிரவை தம்பியிடம் ஒப்படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்