விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட நர்சிங் மாணவிகள் 30 பேருக்கு வாந்தி-மயக்கம்

விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட நர்சிங் மாணவிகள் 30 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-05-22 18:45 GMT

மங்களூரு-

மங்களூரு டவுனில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில் தங்கி ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடுதியில் மாணவிகள் உணவு பரிமாறப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 30 மாணவிகளுக்கு திடீரென்று வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், வார்டன்கள் உதவியுடன் அந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக மங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர் மற்றும் போலீசார், அதிகாரிகள் விடுதிக்கு வந்தனர். அதிகாரிகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர். அப்போது, உணவு விஷமானதால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து விடுதி மீது மாணவிகளின் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து மங்களூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்