குஜராத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சலுக்கு பெண் பலி?
குஜராத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சலுக்கு பெண் பலியானாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
வதோதரா,
குஜராத்தின் வதோதரா நகரில் 58 வயதான பெண் ஒருவர், வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இறந்தார். அவருக்கு எச்.3என்.2 இன்புளுயென்சா எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் இருந்ததா? என்பது பற்றி ஆராய, மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
"கடந்த 11-ந்தேதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். பரிசோதனை முடிவுகள் வந்தபின்னர்தான், அவர் வைரஸ் காய்ச்சலால் இறந்தாரா என்பதை உறுதி செய்ய முடியும்.
குஜராத்தில் இந்த ஆண்டு மார்ச் 10-ந்தேதி வரை 80 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பதிவாகி உள்ளது. இவர்களில் 3 பேருக்கு மட்டுமே புதிய வகை வைரஸ் காய்ச்சலான எச்.3 என்.2 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் யாரும் இறக்கவில்லை" என்று சுகாதாரத்துறை மந்திரி ருஷிகேஸ் படேல் கூறினார்.