மணிப்பூர்: பயங்கரவாத குழுக்கள் இடையே துப்பாக்கி சண்டை

மணிப்பூரில் பயங்கரவாத குழுக்கள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

Update: 2024-08-09 10:04 GMT

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் கலவரம் வெடித்தது. ஓராண்டை கடந்தும் மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே தற்போதும் நீடித்து வருகிறது. இந்த இனக்குழுக்களில் சிலர் குழுவாக இணைந்து தற்போது ஆயுதமேந்தி தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த குழுவினரை மத்திய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. அதேவேளை, இந்த பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், பயங்கரவாத குழுக்கள் இடையேயும் அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டம் தொர்பங் பகுதியில் பயங்கரவாத குழுக்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கி சூடு சண்டையில் ஈடுபட்ட பயங்கரவாத குழுக்கள் ஒரே இனக்குழுவை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்