போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

கைது செய்ய சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

Update: 2023-03-13 21:44 GMT

யாதகிரி, மார்ச்:

கைது செய்ய சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

தொழில் அதிபர்

யாதகிரி டவுன் பகுதியை சேர்ந்தவர் தீபக். தொழில் அதிபர். இவர் தனது வீட்டில் குடும்பத்துடன் படுத்து தூங்கினார். அந்த சமயத்தில் வீட்டிற்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல், கத்தி மற்றும் துப்பாக்கி முனையில் தீபக் குடும்பத்தினரை மிரட்டி நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து தீபக் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் முகமது சஜீத், சையது முக்தியார், மகபூப் உள்பட 4 பேர் என்பது தெரிந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலின் தலைவன் முகமது ரபி என்பவர் இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்து. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்

அப்போது கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து முகமது ரபி தப்பி ஓட முயன்றார். அப்போது போலீஸ் அதிகாரிகள் அப்துல், ஹரினா ரெட்டி ஆகியோர் துப்பாக்கியால் முகமது ரபியின் காலில் சுட்டனர். இதில் சுருண்டு விழுந்த முகமது ரபி, ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்