குஜராத் ஒன்றும் பாகிஸ்தான் கிடையாது: தேவேந்திர பட்னாவிஸ் கருத்து

குஜராத் ஒன்றும் பாகிஸ்தான் கிடையாது. அதுவும் நமது சகோதர மாநிலம்தான் என்று மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-17 07:29 GMT

மும்பை,

1.54 லட்சம் கோடி முதலீட்டில் மராட்டிய மாநிலத்தில் அமைய இருந்த தொழிற்சாலை, குஜராத்திற்குச் சென்றுவிட்டதற்கு அம்மாநிலத்தில் ஆளும் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் இதற்கு பதில் கொடுத்துள்ள தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் ஒன்று பாகிஸ்தான் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

குஜராத் ஒன்றும் பாகிஸ்தான் கிடையாது. அதுவும் நமது சகோதர மாநிலம்தான். இவை எல்லாம் ஒரு ஆரோக்கியமான போட்டியே. இதில் நாம் குஜராத், கர்நாடகா என எல்லோரையும் தாண்டி முன்னேறிச் செல்ல வேண்டும். வளர்ச்சி திட்டங்களை கெடுப்பதில் மட்டுமே எதிர்க்கட்சிகள் குறியாக இருக்கின்றன. முந்தைய அரசு எதற்கெடுத்தாலும் கமிஷன் கேட்டதால் மட்டுமே முதலீடுகள் குஜராத்திற்கு சென்றன' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்