குஜராத் சுகாதார துறை அமைச்சர் ருஷிகேஷ் படேலுக்கு கொரோனா தொற்று
குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார்.
காந்திநகர்,
குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார்.மேலும், அவர் தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ருஷிகேஷ் படேல் சாதாரண அறிகுறிகள் உணர்ந்ததை அடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், படேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து படேல் கூறுகையில்,
" நான் தற்போது முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறனே். என்னுடன் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களையும் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.