ஆமதாபாத், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.இந்தநிலையில், காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. குளிரையும் பொருட்படுத்தாமல் காலை முதலே மக்கள் ஆர்வமாக வந்து தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர்.குஜராத் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் இன்று தேர்ந்தல் நடந்த நிலையில் அதிகபட்சமாக தபி மாவட்டத்தில் 72.32% வாக்குகள் பதிவாகி உள்ளன.