குஜராத்: ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சூரத்,
குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள பண்டேசரா பகுதியில் ஜவுளி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று இரவு தீடீரென தீப்பிடித்து ஆலை முழுவதும் பரவியது.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தொிவிக்கப்பட்டது. 15- க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தீயணைப்பு அதிகாாிகள் தொிவித்தனா்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.