குஜராத்தில் மின்சார நிலைய பழமையான கோபுரம் வெடிவைத்து தகர்ப்பு

குஜராத் மாநிலம் சூரத் நகரில் எரிவாயுவில் இயங்கும் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது.;

Update: 2023-03-21 20:15 GMT

சூரத், 

குஜராத் மாநிலம் சூரத் நகரில் எரிவாயுவில் இயங்கும் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது.

இங்குள்ள குளிர்விக்கும் கோபுரம், 85 மீட்டர் உயரமும், 72 மீட்டர் அடிப்பகுதி சுற்றளவும் கொண்டது. இந்த கோபுரம் 30 ஆண்டுகள் பழமையானதால், இதை வெடிவைத்து தகர்த்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 220 கிலோ வெடிபொருட்களை பயன்படுத்தி இக்கோபுரம் நேற்று காலை 11.10 மணிக்கு தகர்க்கப்பட்டது.

அப்போது பலத்த சத்தம் எழ, வெறும் 7 வினாடிகளில் பெரும் கற்குவியலாக அந்த கோபுரம் மாறிவிட்டது.

கோபுர தகர்ப்பு நடவடிக்கையையொட்டி மின் நிலைய பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தடுப்புகள் அமைத்து, மின் நிலையத்தை நெருங்காமல் பொதுமக்கள் தடுக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்