குஜராத்: பாவ்நகர் ஏரியில் குளித்த 4 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

குஜராத் மாநிலம் பாவ்நகர் ஏரியில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Update: 2024-05-21 15:04 GMT

காந்திநகர்,

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் போர்தலாவ் என்ற செயற்கை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் குளிப்பதற்காக ஒரு பெண் மற்றும் 5 சிறுமிகள் சென்றுள்ளனர். அந்த பெண் ஏரிக்கரையில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தபோது சிறுமிகள் நீரில் இறங்கி குளித்துள்ளனர்.

அப்போது சிறுமிகள் 5 பேரும் நீச்சல் அடிக்க முடியாமல் தத்தளித்துள்ளனர். இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அந்த சிறுமிகளை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் 12 வயதான ஒரு சிறுமியை மட்டுமே மீட்க முடிந்த நிலையில், மற்ற 4 பேரும் நீரில் மூழ்கினர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், நீரில் மூழ்கிய 4 சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவத்தில் அர்யானாபென் தாபி(17), காஜல்(12), ராஷி(19) மற்றும் அவரது சகோதரி கோமல்(13) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்