ஜி.எஸ்.டி. இழப்பீட்டை நீட்டிக்க மத்திய அரசு மறுப்பு- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்

கர்நாடகத்திற்கு ரூ.8,800 ேகாடி ஜி.எஸ்.டி. பாக்கியை வழங்கியிருப்பதாகவும், ஜி.எஸ்.டி. இழப்பீட்டை நீட்டிக்க மத்திய அரசு மறுத்துவிட்டதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-07-20 17:16 GMT

பெங்களூரு: கர்நாடகத்திற்கு ரூ.8,800 ேகாடி ஜி.எஸ்.டி. பாக்கியை வழங்கியிருப்பதாகவும், ஜி.எஸ்.டி. இழப்பீட்டை நீட்டிக்க மத்திய அரசு மறுத்துவிட்டதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில்  நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ரூ.8,800 ேகாடி நிலுைவத்ெதாகை

மத்திய அரசு ஜி.எஸ்.டி. (சரக்கு-சேவை வரி) இழப்பீட்டு நிலுவைத்தொகை ரூ.8,800 கோடியை கர்நாடகத்திற்கு வழங்கியுள்ளது. மீதம் உள்ள பாக்கி தொகையையும் மத்திய அரசு விரைவில் வழங்கும். இதில் சந்தேகம் இல்லை.

மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஜி.எஸ்.டி. இழப்பீடு இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த இழப்பீட்டு காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.

நீடிக்க மறுப்பு

ஆனால் மத்திய அரசு, சட்டப்படி 5 ஆண்டுகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்றும், அதற்கு மேல் இழப்பீட்டு காலத்தை நீட்டிக்க முடியாது என்றும் கூறிவிட்டது.

அதே நேரத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் பங்கு தொகையை மத்திய அரசு வழங்குகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வரி வருவாய் பூஜ்ஜியமாக இருந்தது. ஆனாலும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மத்திய அரசு வழங்குகிறது.

மாநகராட்சி வார்டு

பெங்களூரு மாநகராட்சி வார்டு மறுவரையறை குறித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டில் 22-ந் தேதி (நாளை மறுநாள்) தாக்கல் செய்வோம். அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை மாநில அரசு பின்பற்றும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்