அடுத்த மாதம் 2-ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஆன்லைன் விளையாட்டு வரி குறைக்கப்படுமா?

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-07-28 23:45 GMT

புதுடெல்லி, 

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், ஆன்லைன் விளையாட்டின் மொத்த வருவாய்க்கு 28 சதவீத வரி விதிப்பதா அல்லது ஒவ்வொரு விளையாட்டுக்கும் இந்த அளவு வரி விதிப்பதா என்பது குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் வரி விதிப்பது என்பது, ஒரே வருவாய்க்கு திரும்பத் திரும்ப வரி விதிப்பதாக அமையும்.

எனவே வரி அளவு 50 முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துவிடும் என்று மத்திய வருவாய்த்துறை செயலாளர் நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டார். இந்த விஷயம் தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஜி.எஸ்.டி. குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, இத்துறை சார்ந்தவர்களுக்கு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்