ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி

Update: 2024-01-21 18:41 GMT
Live Updates - Page 4
2024-01-22 05:04 GMT

ராமர் கோவில் வளாகத்திற்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வருகை தந்துள்ளார்.

2024-01-22 05:01 GMT

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த்,அமிதாப்பச்சன்,தொழிலதிபர் அனில் அம்பானி,ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

2024-01-22 04:59 GMT

ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அமெரிக்காவில் கார் பேரணி நடத்திய விஸ்வ ஹிந்து பரிஷத்

2024-01-22 04:50 GMT

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்துள்ள பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கூறியதாவது:

இது நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான நாள் என்று நான் நினைக்கிறேன். இன்று இங்கு இருக்கும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி. என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்றார்.

2024-01-22 04:44 GMT

ராமர் கோவில் வளாகத்திற்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வருகை தந்துள்ளார்.

2024-01-22 04:15 GMT

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து விக்கி கௌஷல், கத்ரீனா கைப் ஆகியோர் அயோத்திக்கு புறப்பட்டனர்.

2024-01-22 03:17 GMT

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர்

2024-01-22 03:15 GMT

தீக்குச்சிகளால் உருவான ராமர் கோவில்

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு தீக்குச்சிகளைக்கொண்டு ராமர் கோவிலின் பிரதியை செய்து சாஸ்வத் ரஞ்சன் என்ற சிற்பி அசத்தி உள்ளார்.

2024-01-22 02:23 GMT

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்பதற்காக ஐதராபாத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்ட னர் நடிகர் சிரஞ்சீவி,நடிகர் ராம் சரண்

2024-01-22 00:20 GMT

அயோத்தியில் இன்று கண் திறக்கும் பால ராமர்...

அயோத்தியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ராமர் கோவில் கும்பாபிஷேம் விமரிசையாக நடைபெறுகிறது.

ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணி அகற்றும் பிரான் பிரதிஷ்டை விழா, பிரதமர் மோடி தலைமையில் இன்று பகல் 12.20 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் ராமர் கண்ணை மறைத்து கட்டப்பட்டுள்ள மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டு, சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

இனி, அயோத்தி வரும் பக்தர்களுக்கு பால ராமர் காட்சிதர உள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதால் இனி ராம ராஜ்ஜியம் தான் என்று மக்கள் மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர்.

மேலும் இந்த கோவில் கும்பாபிஷேக விழாவை, தீபாவளி பண்டிகையை போல் மக்கள் கொண்டாடுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்