ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
பாலராமர் கண்களில் கட்டப்பட்டிருந்த துணி பூஜைகளுக்கு பிறகு அகற்றப்பட்டது. ராமர் சிலையை பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டிட தொழிலளர்களுக்கு பூக்கள் தூவி கவுரவம் அளித்தார் பிரதமர் மோடி
அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதன் முக்கிய விவரங்கள் வருமாறு:
- பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்து விட்டார்.
- ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது
- கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோவில் கிடைத்துள்ளது.
- இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார்
- இந்த நன்னாளில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது.
- அடிமை தனத்தில் இருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம்.
- கோவில் கட்டுவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு ராமரிடம் மன்னிப்பு கோருகிறேன்
- கால சக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம்.
- நாட்டின் நியாயத்தை வழங்குவதற்கு நியாய ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறைகள் இருப்பின் ராமர் நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
- 1000 ஆண்டுகளுக்கும் பிறகும் மக்கள் இந்த நாளை நினைவில் வைத்திருப்பார்கள்.
ஜெய் ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே முழக்கங்களுடன் ராமர் கோவில் பொதுக் கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உரையாற்றி வருகிறார். பொதுக் கூட்டத்தில் பங்கேற்றவர்களும் முழக்கங்களை எழுப்பினர்.
பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோருக்கு அயோத்தி ராமர் கோவில் வடிவத்தை நினைவுப் பரிசாக வழங்கினார் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்.
அயோத்தி ராமர் கோவில் வளாகப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி சற்று நேரத்தில் உரையாற்றுகிறார். இப்பொதுக் கூட்டத்தில் சுமார் 7,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
காலை 7 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை. பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை. மாலை 6.30, இரவு 7.30 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை, வழிபாட்டுக்கு பின்னர் சாதுக்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற பிரதமர் மோடி. சாதுக்கள் புடைசூழ பிரதமர் மோடிக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை, முதல் வழிபாட்டுக்குப் பின்னர் ராமர் சிலை முன்பாக நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி
பிராணப்பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் கோவிலை சுற்றி பார்த்தார் பிரதமர் மோடி.கலை நயத்துடன் கட்டப்பட்ட ராமர் கோவிலின் ஒவ்வொரு மண்டபத்தையும் மோடி பார்வையிட்டார். கோவிலை பார்வையிட்ட மோடி வெளியே வந்து பார்வையாளர்களை நோக்கி வணக்கம் தெரிவித்தார்.
ராமர் கோவில் திறப்பான தெய்வீக நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரும் பாக்கியம். அயோத்தியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றார்.