ஜார்க்கண்டில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று காலை ரிக்டர் 3.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2024-11-02 09:03 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள குந்தி மாவட்டத்தில், இன்று காலை 9.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை. நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் கந்த்ரா உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்