நஞ்சுண்டேஸ்வர் கோவில் பெரிய தேரோட்டம்

நஞ்சன்கூடுவில் உள்ள பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் பெரிய தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-02 22:10 GMT

மைசூரு:-

தென்னகத்தின் காசி

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் கபிலா ஆற்றங்கரையோரத்தில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது. வடக்கே உள்ள காசிக்கு அடுத்தப்படியாக தென்னகத்தில் உள்ள பெரிய சிவ ஆலயம் இதுவாகும். இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில், நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் 2-ந்தேதி (நேற்று) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

பெரிய தேரோட்டம்

அதன்படி நேற்று நஞ்சுண்டேஸ்வர் கோவிலில் பெரிய தேரோட்டம் நடந்தது. காலை 6 மணியில் இருந்து காலை 6.40 மணிக்குள் சுப மீன லக்கனத்தில் தேரோட்டம் தொடங்கியது. இந்த தேரை மைசூரு மன்னர் யதுவீர், மகாராணி பிரமோதா தேவி, கலெக்டர் ராஜேந்திரா ஆகியோர் வடம் பிடித்து தேரை இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். நஞ்சுண்டேஸ்வரர் தேரை தொடர்ந்து பார்வதி, சுப்பிரமணியன், கணபதி, ஜண்டிகேஸ்வரி ஆகிய 4 சிறிய தேர்களும் வந்தன. இந்த தேர்களை ஆயிரக்கணக்கான மக்கள் இழுத்தனர்.

திரளான பக்தர்கள் அங்கு குவிந்து சாமி தரிசனம் செய்தனர். அங்கு சிவ கோஷம் விண்ணை பிளந்தன. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தேர்கள் மீது வாழைப்பழங்கள், நவதானியங்கள், மரிக்கொழுந்து ஆகியவற்றை வீசினர்.

நாளை தெப்ப உற்சவம்

இந்த தேரோட்டத்தையொட்டி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. ேமலும் கே.எஸ்.ஆர்.டி.சி. மைசூரு மண்டலம் சார்பில் நஞ்சன்கூடுவுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடக்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்