வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் ரூ.10 லட்சம் வரை பணம் அனுப்பலாம் - மத்திய அரசு அறிவிப்பு

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எப்சிஆர்ஏ) திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.

Update: 2022-07-03 05:27 GMT

Image Courtesy : PTI 

புதுடெல்லி,

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு ரூ.10 லட்சம் வரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பணம் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கென வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எப்சிஆர்ஏ) திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள புதிய விதிகள் குறித்த அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதற்குமுன் வெளிநாட்டில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு ஒரு நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். இதில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது நிதியாண்டில் ரூ.10 லட்சம் வரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் உறவினர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்