புதுச்சேரி: அரசு தந்தை பெரியார் பள்ளியை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார்
புதுச்சேரியில் பழமை வாய்ந்த தந்தை பெரியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியில் பழமை வாய்ந்த தந்தை பெரியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார். உடன் சபாநாயகர் செல்வம் பாஸ்கர் எம்எல்ஏ அரசு அதிகாரிகள் பல பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
முன்னதாக பள்ளியில் சார்பாக மாணவர்கள் கவர்னருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு பெண்களுக்கான கபடி போட்டியை தொடங்கி வைத்தார். பிறகு பள்ளியை சுற்றி பார்வையிட்டார். மேலும் பள்ளி நூலக அறையை பார்வையிட்டு மாணவர்களிடம் கலந்துரையாடல் செய்தார்.
பள்ளி ஆசிரியர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது அப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மணவெளி பகுதியில் ஆண்களுக்கு என அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால், தந்தை பெரியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை இருபாலரும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய கோரிக்கை வைத்தனர்.
மேலும் இப்பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தொழில் கல்விக்கூடம் ஒன்று செயல்பட்டு வந்தது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த கூடம் செயல்படாமல் இருக்கிறது. மேலும் கட்டிடங்களும் பழுதாகி விட்டது. எனவே புதிய கட்டிடம் கட்டி மீண்டும் தொழில் கூடத்தை தொடங்கி வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் சிவகாமி, பள்ளி துணை முதல்வர் சுபாஷ் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்