உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
டெல்லிக்கு பயணம் சென்றுள்ள தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.;
புதுடெல்லி,
டெல்லிக்கு பயணம் சென்றுள்ள தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்ட சபையில் இன்று மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். அங்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து அவருடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து அவர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட சிலருடன் சந்திப்புகளை நடத்த உள்ளதாகவும் அதன்பிறகு அவர் சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.