போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு
போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உப்பள்ளி-
தார்வார் நகரில் அரசு உயர் நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்லப்பா கவுடா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக சித்தப்பா அக்கி என்பவர் தார்வார் உபநகர் போலீசில் புகாார் கொடுத்தார். அதாவது, கடந்த 2001-ம் ஆண்டு விடுதி வார்டனாக பணியாற்றி எல்லப்பா கவுடா, 2006-ம் ஆண்டு உத்தரபிரதேசம் சென்று அங்குள்ள பல்கலைக்கழத்தில் படித்தது போன்று போலியாக பி.எட் சான்றிதழை தயாரித்து அதனை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்தப்பா கூறினார்.
இதற்கிைடயே இதுபற்றி அறிந்ததும் எல்லப்பா கவுடா தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து தார்வார் உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.