கோடி பெங்கெரே, புகையிலையற்ற கிராமம்-அரசு அறிவிப்பு

கோடி பெங்கெரேயை, புகையிலையற்ற கிராமமாக அரசு அறிவித்துள்ளது.;

Update: 2022-06-01 16:45 GMT

மங்களூரு:உடுப்பி மாவட்டம் டவுன் அருகே கோடி பெங்கெரே கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 290 வீடுகளில் 1,375 பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராம மக்கள் புகையிலை மற்றும் மது அற்ற கிராமமாக மாற்ற முடிவு செய்தனர். அதற்கான நடவடிக்கைகளிலும், கடை உரிமையாளர்கள் உள்பட கிராம மக்கள் அனைவரும் ஈடுபட்டனர். இந்த நிலையில் கிராம மக்களின் கடின முயற்சியால் 20 ஆண்டுகளுக்கு பின், கோடி பெங்கெரே கிராமம் புகையிலை மற்றும் மது அற்ற கிராமமாக மாறியுள்ளது.

அதற்காக கர்நாடக அரசு அந்த கிராமத்தை புகையிலையற்ற கிராமமாக அறிவித்துள்ளது. இதற்காக கிராமத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஹாலடி சீனிவாஸ் செட்டி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அந்த கிராமத்தின் எல்லையில் புகையிலையற்ற கிராமம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்