அரசு பஸ் டிரைவர் தற்கொலை: பணிமனை மேலாளர் மீது போலீசார் வழக்கு

அரசு பஸ் டிரைவர் தற்கொலையில் பணிமனை மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-30 16:45 GMT

பெங்களூரு: பெங்களூரு ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள அரசு பணிமனையில் டிரைவராக பசப்பா என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற பசப்பா பணிமனை அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு பணிமனை மேலாளர் மல்லிகார்ஜூனாத் தான் காரணம் என கூறி பசப்பாவின் உடலுடன், அவரது குடும்பத்தினர் பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி கட்சியினரும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். அப்போது பசப்பாவின் மனைவி பேசுகையில், பசப்பாவின் இறப்பிற்கு காரணமான மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணவர் இறப்பு குறித்து போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு, போக்குவரத்து அதிகாரிகள் யாரும் கேட்கவில்லை என்றார். போராட்டத்தில் பசப்பாவின் மாற்றுத்திறனாளி மகளும் கலந்து கொண்டு நீதி வேண்டும் என முழக்கமிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜராஜேஷ்வரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டக்காரர்களை கலைந்து போக செய்தனர். இதையடுத்து பணிமனை மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்