இந்திய கவிஞருக்கு டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்திய கூகுள் - யார் இந்த பாலாமணி அம்மா ?

பாலாமணி அம்மாவின் இந்த டூடுலை கேரளாவைச் சேர்ந்த ஓவியர் தேவிகா ராமச்சந்திரன் வடிவமைத்துள்ளார்.

Update: 2022-07-19 10:21 GMT

சென்னை,

பிரபல மலையாள கவிஞர் பாலாமணி அம்மாவின் 113வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு அசத்தியுள்ளது. "மலையாள இலக்கியத்தின் பாட்டி" என்று அழைக்கப்படும் பாலாமணி அம்மாவின் இந்த டூடுலை கேரளாவைச் சேர்ந்த ஓவியர் தேவிகா ராமச்சந்திரன் வடிவமைத்துள்ளார்.

அந்த டூடுலில் பாலாமணி அம்மா ஜன்னல் ஓரமாக அமர்ந்து கவிதை இயற்றுவதை போன்று வடிவமைக்கப்ட்டுள்ளது. பல புத்தகங்களையும் அதில் இடம்பெற்றுள்ளன.

பிரபல இந்திய கவிஞரான பாலாமணி அம்மா அவர்கள் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய விருது மற்றும் பத்ம விபூஷன் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.  இவர் ஜூலை 19, 1909 அன்று கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புன்னயூர்குளத்தில் உள்ள நாலாபட்டில் பிறந்தவர். அவர் பிரபலமான மலையாள கவிஞராக இருந்த அவரது மாமா நலப்பட் நாராயண மேனனால் வீட்டில் கல்வி பயின்றார்.

1930 ஆம் ஆண்டு தனது 21வது வயதில் கூப்புகை என்ற தலைப்பில் பாலாமணி தனது முதல் கவிதையை வெளியிட்டார். அம்மா (1934), முத்தச்சி (1962) மற்றும் மழுவின் கதை (1966) ஆகியவை அவரது மிகவும் பிரபலமான படைப்புகள் ஆகும். அவர் கவிதை, உரைநடை மற்றும் மொழிபெயர்ப்புகளின் 20 க்கும் மேற்பட்ட தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

இவர் 1984 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலா தாஸின் தாய் ஆவார். குழந்தைகள் மீது பாலாமணி அம்மாவின் அன்பை விவரிக்கும் பாலாமணி அம்மாவின் கவிதைகள் அவருக்கு மலையாளக் கவிதையின் அம்மா மற்றும் பாட்டி என்ற பட்டங்களைப் பெற்றுத் தந்தன. அவர் 2004 இல் காலமானார்.

Tags:    

மேலும் செய்திகள்