ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து: 8 ரெயில்கள் ரத்து

ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து காரணமாக 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.;

Update: 2023-06-15 20:32 GMT

கோப்புப்படம்

ஐதராபாத்,

ஆந்திராவில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் ஒன்று தடி-அனகபள்ளி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் தடம் புரண்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சரக்கு ரெயில் தடம் புரண்டதால் அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்லும் 8 பயணிகள் ரெயில்களை நேற்று, இன்று, நாளை என 3 நாட்களுக்கு தெற்கு மத்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது.

அந்த வகையில் விசாகப்பட்டணம்-லிங்கம்பள்ளி, விசாகப்பட்டணம்-மசூலிப்பட்டணம், விசாகப்பட்டணம்-குண்டூர், விசாகப்பட்டணம்-விஜயவாடா ஆகிய ரெயில்கள் இரு வழிகளிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்