ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கோதாவரி ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-10 13:24 GMT

ஐதராபாத்,

ஆந்திர பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், கோதாவரி ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி கோதாவரி ஆற்றில் வினாடிக்கு 10 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் அம்பேத்கர் கூறுகையில், கோதாவரி ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்