சீக்கிரம் வந்து 45 பயணிகளை தவிக்க விட்டு சென்ற கோவா எக்ஸ்பிரஸ் ரெயில்

90 நிமிடங்கள் சீக்கிரம் வந்து 45 பயணிகளை கோவா எக்ஸ்பிரஸ் ரெயில் ஏற்றாமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-07-30 06:43 GMT

கோவா,

இந்தியாவில் அதிக தூரம் பயணம் செய்வதற்கு மக்கள் ரெயில் போக்குவரத்தையே தேர்வு செய்கின்றனர். ஆனால் ரெயிலானது சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் பல பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ரெயில்கள் தாமதமாக வருவதால் ரெயில் நிலையத்திற்கு எப்போது வரும் என்பது சரியாக தெரிவதில்லை என பொதுமக்கள் சார்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்தநிலையில் கோவாவில் இருந்து டெல்லி செல்லும் விரைவு ரெயிலானது நாசிக் அருகே உள்ள மன்மத் ரெயில் நிலையத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்பே வந்தடைந்தது. பிறகு 5 நிமிடத்தில் புறப்பட்டுச்சென்றது.

அட்டவணை நேரத்தை விட முன்னதாக வந்ததால் சுமார் 45 பயணிகள் ரெயிலை தவற விட்டனர். ரெயிலை தவற விட்ட பயணிகள் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்த ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்