குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு

சிக்கமகளூரு அருகே, குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் கன்னட அமைப்பினர் மனு கொடுத்தனர்.;

Update: 2022-07-09 15:40 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா ராமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கன்னட ரக்‌ஷன வேதிகே எனும் கன்னட அமைப்பினர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் மாவட்ட கலெக்டர் ரமேசை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

தரிகெரேவில் இருந்து ராமனஹள்ளி செல்லும் சாலை முற்றிலும் மழையால் சேதம் அடைந்து மண் ரோடாக மாறியுள்ளது. மேலும் அந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த குழிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

அப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அந்த சாலையை உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்