துப்பாக்கி முனையில் சிறுமி பலாத்காரம்: மாடியில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்

தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.;

Update: 2024-07-26 01:08 GMT

புதுடெல்லி,

தென்மேற்கு டெல்லியின் துவாரகா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி சிறுமியை அருகில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கொலை முயற்சி மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்