சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோலார் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-04-12 18:45 GMT

கோலார் தங்கவயல்-

கோலார் மாவட்டம் சீனிவாஸ்பூர் தாலுகா, ராயல்பாடு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீகேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 23). இவர் அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை 2020-ம் ஆண்டு கடத்திச் சென்று பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சீனிவாஸ்பூர் புறநகர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் ேபரில் நவீன் குமார் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோலார் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இறுதி விசாரணை நடந்து முடிந்தது. இதையடுத்து நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நவீன் குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்