கேரளாவில் முஸ்லிம் உலமாவை காரை ஏற்றிக் கொல்ல முயன்ற கும்பல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி
கேரள மாநிலம் கொல்லம் அருகே முஸ்லிம் உலமாவை காரை மோதி கொல்ல முயற்சிக்கும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.;
கொல்லம்,
கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் ஜும்மாவில் உலமாவாக பணிபுரிந்து வருபவர் சபீர் செய்னி. இவர் நேற்று ஜும்மாவில் இருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள இருக்கும் தனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என கூறி வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
கார் சிறிது தூரம் சென்ற போது தான் ஏமாற்றப்படுவதாக சபீர் உணர்ந்தார். உடனடியாக காரை நிறுத்த சொல்லி அங்கிருந்து ஓடிய சபீரை, அந்த கும்பல் காரால் மோதி கொல்ல முயற்சித்தது. அதிர்ஷ்ட வசமாக சபீர் உயிர் தப்பினார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்ய முயற்சித்த அந்த மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.