மத்திய மந்திரி பியூஸ் கோயல் வீட்டில் விநாயகர் சதூர்த்தி விழா: பிரதமர் மோடி பங்கேற்பு - வீடியோ

மத்திய மந்திரி பியூஸ் கோயல் வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதூர்த்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.;

Update: 2022-08-31 16:51 GMT

புதுடெல்லி,

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் இரண்டு வருட அடக்கமான கொண்டாட்டத்திற்குப் பிறகு நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சதுர்த்தி தினமான இன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். அதே போன்று நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள், விநாயகர் ஆலங்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் பெரிய அளவிலான சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் இல்லத்திற்கு வருகை தந்தார். அங்கு விநாயக சதுர்த்தி வழிபாடு பூஜைகள் செய்து வழிபட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்